மிஸ்ஸன் மில்லியனர் கிளப் சார்பில் தொழில் முனைவோருக்கான மாபெரும் வழிகாட்டும் நிகழ்வு லீ மெரிடியன் ஓட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது. ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் தலைமையில் இந்நிகழ்வு நடந்தது.

இதில் தன்னம்பிக்கை பேச்சாளர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன், பிரபல பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், சுகி சிவம், சார்லஸ் காட்வின், நேச்சுரல்ஸ் ஸ்பா நிறுவனர் குமரவேல், தங்கமயில் ஜுவல்லரி நிர்வாக இயக்குனர் ரமேஷ், அணில் சேமியா நிறுவனர் சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முக்கிய நிகழ்வாக ஸ்ரீ சசிகுமார் எழுதிய ‘அற்புதங்கள் படைக்கும் மில்லியனர் மனநிலை’ என்ற தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இதனை சிந்தனைக் கவிஞர் கவிதாசன் வெளியிட, சுகிசிவம் பெற்றுக்கொண்டார்.

தொழில் முனைவோர், எப்படி ஒரு தொழிலை துவங்குவது, அதை எவ்வாறு வளர்ச்சி பெறச் செய்வது மற்றும் எப்படி மாபெரும் நிறுவனமாக மாற்றுவது என புரிந்து கொள்ள வழிகாட்டும் நிகழ்ச்சியாக அமைந்தது.

தொழில் நகரமான கோவையில், எப்படியெல்லாம் தொழிலில் பலர் முன்னேற்றம் அடைந்தனர், அவர்களது அயராது உழைப்பு, செயல்திறன், வகுத்த திட்டங்கள் விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோவை, ஈரோடு, திருப்பூர்  உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து இளம் தொழில் முனைவோர் பலர் கலந்து கொண்டனர்.

Photostory Template Landscape 2

திறமையை மேற்படுத்த வாய்ப்பு

ஞான சஞ்சீவன குருகுலத்தின் நிறுவனர் ஸ்ரீ சசிகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கும், அதில் வெற்றி பெறுவதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்கான நிகழ்வாக பெரிதினும் பெரிது கேள் நிகழ்வு நடத்தப்படுகிறது. குறிப்பாக புதிய தொழில்முனைவோர் தனது திறமைகளை மேம்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும். பெண் தொழில் முனைவோர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்தும் தனியாக அமர்வு நடைபெறுகிறது.

தற்போது தொழில் நுட்பம், சந்தை நிலவரம், ஆளுமை திறன் போன்றவற்றில் போதிய கவனம் செலுத்தாமையால் புதிய தொழில் முனைவார்கள் தொழில்களை தொடர முடியாத சூழல் ஏற்படுகிறது. இதுகுறித்த புரிதலை தொழில் முனைவோர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக பெரிதினும் பெரிது கேள் நிகழ்வை நடத்துவதாக தெரிவித்தார்.