ஸ்ரீ ராமகிருஷ்ணா இயன்முறை மருத்துவக் கல்லூரியில் 33வது இளங்கலை மற்றும் 25வது முதுகலை பிசியோதெரபி பட்டமளிப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் விழாவிற்குத் தலைமை தாங்கினார்.

தலைமை விருந்தினராக தேசிய கூட்டு சுகாதாரப் பணிகள் ஆணையத்தின் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பட்டதாரிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். 49 இளங்கலை, 29 முதுகலை பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள், 52 கல்விசார் சிறப்பு விருதுகளும், சிறந்த வெளிச்செல்லும் மாணவர்களுக்கான தங்கப்பதக்ககம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் சீதாராமன், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.