ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 35வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக எல் & டி டெக்னாலஜிஸ் நிறுவனம் குளோபல் என்ஜினீயரிங் அகாடமியின் உலகத் தலைவர் கொட்டுர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கினார்.

விழாவில் அவர் பேசியதாவது: நாட்டின் முன்னேற்றத்திற்குக் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்முனைவுத்திறன், பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகிய ஐந்தும் அடிப்படை ஆதாரங்களாக விளங்குகின்றன.

கல்வி என்பது எதிர்காலத்தின் நுழைவாயில். கல்வி அனைவருக்கும் அதிகாரத்தைப் பெற்றுத் தருகிறது. நம்முடைய பண்பாடு, கலாச்சாரத்தை கல்வி போதிக்கிறது. அதனால் தான் பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும், கலாச்சாரத்தில் சிறந்து விளங்குகிறோம்.

புதிய இந்தியா ஏராளமான வாய்ப்புகளை மாணவர்களுக்கு உருவாக்கித் தருகிறது. இந்திய மாணவர்கள் தொழில்நுட்பத்தில் உலகளவில் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர்.  உலக பொருளாதாரத்தில் நாம் மூன்றாவது இடத்தில் உள்ளோம். இதற்கு நம்முடைய கல்வி தான் முக்கிய காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

1,688 இளநிலை மற்றும் 408 முதுநிலை பட்டப்படிப்பு முடித்த மொத்தம் 2,096 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.