இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி விழாவிற்குத் தலைமை தாங்கினார்.
ஓசூரில் உள்ள அசோக் லேலேண்டின் ஊழியர் உறவுத் தலைவர் வேலுமணி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு சான்றிதழ்களை வழங்கினார். நிர்வாக செயலாளர் பிரியா, கல்லூரி முதல்வர் நடராஜன், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 560 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
