டாக்டர் என்.ஜி. பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24 வது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கோவை அவினாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் செயலாளர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி, அறங்காவலர் டாக்டர் அருண் பழனிசாமி,கல்லூரி முதல்வர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இளநிலை 1903, முதுநிலை 390, முனைவர் பட்டம் 12 என மொத்தம் 2305 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.