வேகா ஜூவல்லரி சார்பில் மணப்பெண்களுக்கான தங்க நகை கண்காட்சி, கோவை அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் சனிக்கிழமை தொடங்கியது.

துவக்க விழாவிற்கு கவுரவ விருந்தினராக கோவை எமரால்டு குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சீனிவாசன் பங்கேற்றார். இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், டேப்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி சாலினி பங்கேற்றனர். நவம்பர் 2ம் தேதியும் கண்காட்சி நடைபெறும்.

