கோடை காலம் துவங்கிய நிலையில் கோவை மாநகரில் சென்ற வாரம் வெயில் தாக்கம் அவ்வளவு பெரிதாக இல்லை. அதிர்ஷ்டவசமாக வெப்ப சலன மழை மாநகரின் சில இடங்களில் பெய்ததால் மக்களால் கோடையின் துவக்கத்தை சமாளிக்க முடிந்தது.
இந்த வாரம் மற்றும் வார இறுதி நாட்கள் கோவை மாநகரில் வானிலை எப்படி இருக்கும் என கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்-யிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-
திங்கள் மற்றும் செவ்வாய் (மார்ச் 2 & 3) கோவை மாநகரில் வெப்பம் 34° முதல் 35° வரை செல்லவும், புதன், வியாழன் 34° முதல் 36° வரை மாறி மாறி இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு 36° வரை செல்லவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த வாரம் மாநகரில் வறண்ட வானிலையே இருக்கும். சென்ற வாரம் போல மழைக்கான வாய்ப்பு தென்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
