சக்தி தகவல் மேலாண்மைக் கல்லூரி வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை திறக்கப்பட்டது. இதனை கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் அவர் பேசுகையில்: உலக பொருளாதாரத்தில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. அது அடுத்த நிலைக்கு முன்னேற்றுவது மாணவர்களாகிய உங்களிடம் உள்ளது. வேலைதேடுவதை விட, வேலை கொடுப்பவராக மாற தொழில் முனைவோராக வேண்டும். அப்போது நாடு விரைவாக முன்னேறும்.

வாய்புகள் அனைவருக்கும் பொதுவாகவே உள்ளது, தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கனவு நனவாகும் காலம் வரும் வரை விழிப்புணர்வோடு செயல்பட்டு வாழ்கையில் வெற்றிபெற்று உயர்ந்து சிகரத்தை தொட வாழ்த்துக்கள் என கூறினார்.
நிகழ்வில் கல்லூரியின் இயக்குனர் (பொறுப்பு) சர்மிளா, இயக்குனர் சரவணபாபு, நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் முதல்வர் மாணிக்கசெழியன், மேலாளர் ரகுநாதன், முத்துக்குமரன், உமாபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
