துடியலூர் ஸ்ரீ கணபதி மார்ட், மணியன் குலம் காளியம்மாள் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கணபதிமார்ட் முன்பு அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி திறந்து வைத்தார். இதில், ஸ்ரீ கணபதி மார்க் நிர்வாக இயக்குநர் கணபதி,மணியன்குளம் அறக்கட்டளை செயலாளர் சண்முகம், குபேர ஆஞ்சநேயர் அன்னதான கைங்கரிய டிரஸ்ட் அறங்காவலர் கவிச்சந்திர மோகன் மற்றும் அதன் செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.பொதுமக்களின் நலனுக்காக மோருடன் தர்பூசணி பழமும் வழங்கப்பட்டன.