உதகை, நீலகிரி கல்வி குழுமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜி – டெக் அதி நவீன கணினி மேம்பாடு மையத்தை விஜய் டிவி புகழ் பாலா திறந்து வைத்தார். நிகழ்வில் கே.பி.ஒய் விக்கி சிவா, டிஜிநாடு மற்றும் டிக்கெட்நாடு நிறுவனர் தங்கவேல் புகழ் கலந்துகொண்டனர்.
இக்கல்வி மையத்தின் தலைவர் ஷேக் அகமது ஷெரிப், 5 மாவட்டங்களை உள்ளடக்கிய ஜி – டெக் சிறப்பு மேலாளர் ஜனார்த்தனன், நீலகிரி கல்வி நிறுவனத்தின் மேலாளர் துரை, ஜி – டெக் தமிழ்நாடு மேலாளர் அசாருதீன், பிரீக்ஸ் அங்லோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சரவண சந்தர், என்.எஸ்.எஸ் அலுவலர் மணிகண்டன், கணினி மையத்தின் நிர்வாக இயக்குனர் கோகிலா ராணி மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
இந்த மையத்தில் ரோபோடிக்ஸ், மல்டிமீடியா மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பாடங்கள் கற்பிக்கப்படும். இங்கு பயில விரும்பும் மாணவர்கள் 97889 78445 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

