கோவை மக்கள் சேவை மையம் மற்றும் ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா இணைந்து சுயம் நலத்திட்டத்தின் கீழ் இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1500 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கினார்.