பி.எஸ்.ஜி மருத்துவமனையில் 36வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சர்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் வரும் நவம்பர் 10 முதல் 15ம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 3 மணிவரை மருத்துவமனையின் ‘பி’ பிளாக்கில் நடைபெறும்.
முகாமில் பொது மருத்துவம், கண் நலம் மற்றும் கண் அறுவை சிகிச்சைத் துறை, புனர்வாழ்வு மருத்துவத் துறை, பல் மற்றும் பல் அறுவை சிகிச்சைத் துறை ஆகிய துறைகளின் சிறப்பு மருத்துவர்களால் மருத்துவ ஆலோசனை மற்றும் ரத்த சர்க்கரை பரிசோதனை, பொதுவான பல் பரிசோதனை, பார்வைக் கூர்மை மதிப்பீடு, கண் அழுத்த பரிசோதனை, ஃபண்டஸ் பரிசோதனை, (மோனோ ஃபிளமென்ட் டெஸ்ட்) கால், பாத பரிசோதனை மற்றும் மதிப்பீடு, உடல் தகுதி, வலிமை ஆகிய பரிசோதனைகளும் இலவசமாக அளிக்கப்படும்.
மேலும் முகாமில் பங்கு பெறும் பயனாளிகளுக்கு பரிசோதனை தொகுப்புகள் சிறப்பு சலுகை கட்டணத்தில் செய்து தரப்படும். இந்த பரிசோதனைகளை 25.11.2025 வரை (ஞாயிறு தவிர) செய்து கொள்ளலாம். மருத்துவ முகாம் பற்றிய மேலும் விபரங்களுக்கு: 82200 13330, 9500948104, 87540 22880 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
