எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியில் நிறுவனர் தினத்தை முன்னிட்டு, மூத்த குடிமக்களை கௌரவிக்கும் நோக்கில் பாத பூஜை நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தாத்தா-பாட்டிகளின் வாழ்க்கைப் பங்களிப்பை போற்றும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை நடத்தினர். விழாவில் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தங்களது தாத்தா-பாட்டிகளுக்கு பாத பூஜை செய்தனர்.
