“Foul Odor Intensifies from Garbage Dump; Spreads to Nearby Areas, Causing Public Distress”
கடந்த சில வாரமாக கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கிலிருந்து துர்நாற்றம் வீசுவது அதிகரித்து வருவதாக அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
குப்பைக்கிடங்கை நோக்கி காற்று வீசும்போது, துர்நாற்றம் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு பரவுகிறது. இதனால் போத்தனூர், நஞ்சுண்டாபுரம், ராமநாதபுரம், சுங்கம், சிங்காநல்லூர் மற்றும் சுந்தராபுரம் பகுதிகளிலும் தாக்கம் இருந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதன் காரணத்தால் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், மாலை நேரங்களில் ஜன்னல்களை திறக்க முடியாத நிலையில் அவதிப்படுவதாகவும், திண்ணைகளில் அமரமுடியாத நிலை ஏற்படுவதாகவும் குப்பைக்கிடங்கின் சுற்றுப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் புகார் எழும் பகுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துவதாக மாநகராட்சி ஆணையர் கூறியிருக்கிறார்.
நாளை கோவை வரும் முதலமைச்சர் போத்தனூர் காந்தி நினைவகத்திற்கு செல்லவுள்ளதாக தகவல் உள்ள நிலையில், முதலமைச்சரிடம் குப்பைக்கிடங்கு பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்க உள்ளனர் என தெரியவருகிறது.
