கோவை ராமகிருஷ்ணா இணை மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

இதில் நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மருத்துவ இயக்குநர் டாக்டர் ராஜ கோபால், டாக்டர் அழகப்பன், கல்லூரி முதல்வர் சத்யா  ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர். கல்லூரி முதல்வர் சத்யா வரவேற்புரை வழங்கினார். பல்வேறு துறைகளைப் பற்றிய விளக்கப்படம் ஒளிப்பரப்பட்டது.