இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலர் சரஸ்வதி மற்றும் நிர்வாக செயலர் பிரியா ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது.
பெற்றோர்களுக்கு மாணவர்களின் மீதான அச்சம் வேண்டாம் என்றும், சிற்பியாக இருந்து அவர்களை உருவாக்கி தருவதாக கல்லூரியின் செயலாளர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக மரபின் மைந்தன் முத்தையா கலந்துகொண்டு பேசியதாவது: மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், கவனம் முற்றிலுமாக படிப்பின் மீது இருத்தல் அவசியம் என்றும், சமுதாயத்தில் போதைப் பழக்கமில்லா இளைஞர்களாக உருவாவதே பெருமையானது என்றும் பேசினார். மாணவர்கள் கல்வி சார் பல திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, சேர்க்கை இயக்குனர் ஜெயலட்சுமி, பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
