தமிழ் நாட்டில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கும், டிசம்பர் 19ம் தேதி வெளியான வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்ட பின்னர் அப்பணிகள் நிறைவு பெற்று, இன்று மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் மாவட்ட வாரிய வெளியாகி வருகிறது.
அந்த வகையில் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பவன்குமார் க.கிரியப்பனவர் ஐ.ஏ.எஸ். கோவை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம்- 26,96,813 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள்- 13,00,889,பெண்கள்- 13,95,396,மூன்றாம் பாலினத்தவர்- 528.
