இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மைத் துறை சார்பில், தொழில் முனைவோர் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், செயலாளர் பிரியா நிகழ்வைத் தொடங்கி வைத்தனர்.
முதலாம் நாள் நிகழ்வில், திறந்தவெளி அரங்கில் பல்வேறு புதுமையான 26 விற்பனை மையங்களை மாணவர்கள் அமைத்தனர். இரண்டாம் நாள் நிகழ்வில், பாரதியார் அரங்கில் தொழில் துறையைச் சேர்ந்த நாகராஜ், பெண்கள் தொழில் மேம்பாட்டு அமைப்பு துணைத் தலைவர் மல்லிகா கனகரத்தினம், தொழில் ஆலோசகர் மற்றும் பயிற்றுநர் அருண்குமார் ஆகியோர் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள், பொருளாதார திட்டமிடல், சந்தை ஆய்வு மற்றும் தன்னம்பிக்கை வளர்ச்சி குறித்த கருத்துகளைப் பகிர்ந்தனர்.
நிகழ்வில் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, வணிக மேலாண்மைத் துறை இயக்குநர் சுதாகர், துறை ஒருங்கிணைப்பாளர் திலக், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
