ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் பொறியியல் துறை சார்பில் மின்சார பைக் வடிவமைப்பு போட்டி நடைபெற்றது.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். கல்லூரியின் முதல்வர் டேவிட் ரத்னராஜ் விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்த ஆண்டுக்கான போட்டிகளில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 19 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் பரிசுத் தொகையுடன் 40க்கும் மேற்பட்ட விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

தொடக்க உரையில் சுந்தர் பேசியதாவது: பசுமை இயக்கத் தீர்வுகளை ஏற்றுக்கொள்வதில் மாணவர்களின் ஆர்வத்தைப் பாராட்டினார்.  இந்தியாவின் நிலையான போக்குவரத்தின் மாற்றத்தில் மின்சார வாகனங்களின் அதிகரித்துவரும் பொருத்தத்தை எடுத்துரைத்தார்.  மின்சார வாகனங்களை மக்களுக்கு மேலும் அணுகக்கூடியவையாக மாற்ற பேட்டரி தொழில்நுட்பம், ஆற்றல் திறன் மற்றும் செலவு குறைந்த வடிவமைப்புகளில் புதுமையின் தேவையை வலியுறுத்தினார்.

இதுபோன்ற நிகழ்வுகள் மின்சார வாகன இயக்கத் துறையில் அடுத்த தலைமுறை பொறியாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை வளர்க்கின்றன. இந்த கண்டுபிடிப்புகள் மாசற்ற உலகையும் , சமூகத்திற்கு பயனுள்ள  போக்குவரத்துத் தீர்வுகளை வடிவமைக்கும் என்று குறிப்பிட்டார்.