ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள பாரதி இன்டர்நேஷனல் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழு நேர உறுப்பினரும், மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான அ. முகமது ஜியாவுதீன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.
உரையாற்றிய அவர், “கல்வியும் ஒழுக்கமும் சேர்ந்தால், ஒருவரின் வாழ்க்கை ஏழு தலைமுறைக்கும் வழிகாட்டும். பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வியில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும், நல்லாசிரியர்கள் மாணவர்களின் கேள்விகளை பொறுமையாக விளக்க வேண்டும்” என்று பேசினார். மேலும், திருவள்ளுவர் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கூறிய கல்வியின் மகத்துவத்தையும் விளக்கினார்.
விழாவில் பள்ளி முதல்வர் உமாதேவி தலைமையேற்று, கல்வி நிலையங்களின் நிறுவனர் மோகனாம்பாள், குமாரசாமி, துணை முதல்வர் சந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.