அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடர் பிரச்சார சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் ஜூலை 7ம் தேதி தொடங்குகிறார்.

ஜூலை 7ம் தேதி முதல் 21ம் தேதி வரை சட்டப்பேரவை தொகுதி வாரியாக முதற்கட்ட தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, வரும் 7ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்குகிறார். பின்னர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு செல்கிறார். 8ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து 21ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி முதலே சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் நிலவிய தயக்கம், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்வது என பல்வேறு பணிகள் இருந்ததால் பிரச்சார பயணம் தள்ளிப் போடப்பட்டது.