என்.ஆர்.பி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிச்சாமி, மருத்துவமனை நிர்வாகி சாரதா மணி, டாக்டர் அரவிந்த் ஆகியோருக்கு பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் மாவட்டம் 3242சி சார்பில் தேசிய மருத்துவர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார், வட்டார தலைவர் சுப்பு, நேரு நகர் லயன் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் இன்ஜினியர் தேஜஸ்வினி ஆகியோர் கலந்துகொண்டனர்.