திமுகழக செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜ் மறைவையொட்டி, அவரது இல்லத்திற்கு, சனிக்கிழமை (9-11-2024) காலை 7.30 மணியளவில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்து, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டார்.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ. ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்து, அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்தனர்.

கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, கார்த்திக் செல்வராஜ், கார்த்திகேயன், சோமு சந்தோஷ், கழக நிர்வாகிகள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.