கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 2026 சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.
இன்று திமுக தலைமை வெளியிட அதிகாரபூர்வ பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறங்குகிறார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
வால்பாறையில் ஆ.சுதாகர், கிணத்துக்கடவில் KVKS சபரி கார்த்திகேயன், தொண்டாமுத்தூரில் NR கார்த்தியேன், கோவை வடக்கில் செந்தமிழ் செல்வன், சூலூரில் தளபதி முருகேசன், மேட்டுப்பாளையத்தில் கவிதா கல்யாணசுந்தரம்.
கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பொள்ளாச்சி தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு சென்றுள்ளது.

