இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டலம் சார்பாக தீபாவளி பண்டிகை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் இணைப் பொதுசெயலாளரும், மார்ட்டின் குழுமங்களின் நிர்வாக இயக்குநருமான லீமா ரோஸ் மார்ட்டின் தலைமை தாங்கி, நலத்திட்டங்களை வழங்கினார்.
இதில் நூறு மகளிருக்கு தையல் இயந்திரங்களும், 50 மாணவ மாணவியர்களுக்கு சைக்கிள்களும், மலைவாழ் மக்களுக்கு தீபாவளி புத்தாடைகளும், மாணவர்களுக்கு காலணிகளும் வழங்கினார். மகளிர் அணியினர் மலைவாழ் மக்களுடன் இணைந்து கோலாட்டமும், கும்மியாட்டமும் ஆடினர்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: அரசியல் கட்சி கூட்டங்களுக்கு குழந்தைகளையும், முதியோர்களையும் அழைத்து வருவதை கட்சியினர் தவிர்த்து கொள்ளவேண்டும். கூட்டம் நடத்தும் அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்திற்கு வந்து கலந்துகொள்ள வேண்டும். அரசும், காவல்துறையும் கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பேசினார்.
