ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மில்லினியம், ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வட்டமலைப்பாளையம் இன்டராக்ட் கிளப் ஆகியவை இணைந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு “மதிப்பு மிக்கத் தொழில் சேவை” என்ற விருதை வழங்கியுள்ளது.

கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறைகளில் அவர் செய்துவரும் சோர்வறியாத சேவைகள் மற்றும் மனிதநேய அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு இந்த விருது வழங்கப்பட்டது.

SNR scaled

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, விருதை வழங்கி பேசுகையில்: ஒரு நல்ல நிர்வாகி என்பது நிர்வாகத் திறனைக் கொண்டவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற பணிகளை மேற்கொள்ளும் மனப்பான்மையையும் கொண்டிருக்க வேண்டும். அந்த வகையில் ராம்குமார் தன்னலமற்ற சேவையின் மூலம் பலரின் வாழ்வில் ஒளியை கொண்டு வந்துள்ளார் என்று குறிப்பிட்டார்.