வி.எல்.பி ஜானகியம்மாள் கல்லூரியில் நடைபெற்ற டிஜிட்டல் பாதுகாப்பு நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினருக்கு நினைவுபரிசு வழங்கி பாராட்டுகிறார் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார்.
வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் குற்றங்கள் குறித்து டிஜிட்டல் பாதுகாப்பு மற்றும் சட்ட உரிமைகள் என்கின்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் சதீஷ்குமார் தலைமையேற்று பேசுகையில், பெண்களை ஆன்லைன் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பதில் சைபர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
சட்ட வல்லுநர் இளவேனில் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அனலிஸ்ட் சைபர் பாதுகாப்பின் பயிற்சியாளர் கீர்த்தனா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சைபர் பாதுகாப்பு குறித்த சட்ட நுணுக்கங்கள் பெண்கள் அவற்றை எவ்வ்று எதிர்கொள்வது, சைபர் துன்புறுத்தல் தொடர்பான ஐபிசி பிரிவுகள் குறித்த நடைமுறைகள், சைபர் ஸ்டாக்கிங், அடையாளத் திருட்டு போன்ற ஆன்லைன் துன்புறுத்தல்களையும் பாதுகாப்பான கடவுச்சொற்கள், தனி உரிமை அமைப்புகள் மற்றும் பிஸ்ஸிங் முயற்சிகளை அங்கீகரிப்பது போன்ற முக்கியத்துவத்தினையும் எடுத்துரைத்தனர்.