உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு கோவை, நீரிழிவு நோய் சிறப்பு மையம் மற்றும் மருத்துவமனை சார்பில் ரேஸ்கோர்ஸில் வாக்கத்தான் மற்றும் ஜும்பா நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பாலமுருகன் கூறியதாவது: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி உலக சர்க்கரை நோய் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு எங்கள் மருத்துவமனையில் சிறப்பு டயட் எக்ஸ்போ நடைபெறுகிறது.  சிறப்பு சலுகை கட்டணம் நவம்பர் 14 முதல் டிசம்பர் 13 வரை ஒரு மாத காலத்திற்கு உள்ளது எனக் கூறினார்.

ரோட்டரி மாவட்டம் 3206, ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மற்றும் சங்கங்கள், இந்திய மருத்துவ சங்க கோவை கிளை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை இணைந்து இந்த வாக்கத்தான், ஜும்பா நிகழ்வை நடத்தியது.

இதில் கோவை இந்திய மருத்துவ சங்க கிளையின் மருத்துவர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், மருத்துவமனை செவிலியர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

walk 2

சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு (2028- 2029), ரொட்டேரியன் எம் டி சஞ்சீவிகுமார், இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு மாநில கிளையின் தேர்வு தலைவர் (2026), டாக்டர் ரவிக்குமார், செயலாளர் மருத்துவர் கார்த்திக் பிரபு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் இந்திய மருத்துவ சங்க கோவை கிளையின் தலைவர் டாக்டர் மகேஸ்வரன், ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய் சிட்டி தலைவர் ரொட்டேரியன் ஹால்துரை, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் கிழக்கு தலைவர் ரோட்டேரியன் விஜயகிருஷ்ணன், ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மிட்டவுன் ரொட்டேரியன் ஹரிபாஸ்கர் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்பத்தூர் மில்லினியம் தலைவர் ரொட்டேரியன் எம்டி செபி செபஸ்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.