மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவில் நிர்வாக குளறுபடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை எடுத்த நடவடிக்கை மற்றும் உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் குறித்த விரிவான அறிக்கை தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு ஹோட்டல் கிராண்ட் ரீஜன்ட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதுதொடர்பாக கோவிலின் முன்னாள் அறங்காவலரும், தொழிலதிபருமான  கண்ணன் மற்றும் சிவராஜ் அரவிந்த் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இக்கோவிலின் வாழ்நாள் அறங்காவலராக இருந்த கிருஷ்ணசாமி மற்றும் அறங்காவலராக இருந்த அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் திருமூர்த்தி, பூசாரி பாலசுப்பிரமணியம் மற்றும் ஜெயச்சந்திரன், முரளி, மொபைல் ரவி, எலக்ட்ரீசியன் மயில்சாமி ஆகியோர் கோவிலில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

3 16 scaled

இதில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி 16-05-2023 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக விசாரனை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய இந்துசமய அறநிலைய துறையின் 6 அதிகாரிகளை கொண்ட குழுவை நியமனம் செய்தது. இந்த குழுவினர் கோவிலின் வரவு – செலவு கணக்குகள், கோவில் நிலங்கள், கோவிலில் நடந்த திருப்பணிகள் தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்தனர்.

கடந்த 31ஆண்டுகளாக கோவிலுக்கு வருமான இழப்பு ஏற்பட காரணமாக இருந்தது, பண மோசடி உள்ளிட்ட கிருஷ்ணசாமி மீதான 29 குற்றச்சாட்டுகளையும் ஆதாரப்பூர்வமாக அதிகாரிகள் குழு உயர்நீதிமன்றத்தில் நிரூபணம் செய்தது. இதையடுத்து கிருஷ்ணசாமியை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலின் வாழ்நாள் அறங்காவலர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கி இந்து சமய அறநிலைய துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 15