கோவை, தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியின் ஆண்டு விழா சனிக்கிழமை (12.04.2025) கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பிரபல யூட்டூபர் நந்தா கோபாலகிருஷ்ணன், பூஜா சங்கர் மற்றும் சூப்பர் சிங்கர் பிரபலம் அபர்ணா நாராயணன், பின்னணி பாடகர் மதன் குமார், கானா சக்தி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் அக்பர் பாஷா தலைமை தாங்கினார். கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி தமீஸ் அகமது முன்னிலை வகிர்த்தார். கல்லூரியின் முதல்வர் பார்த்திபன் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். நிகழ்வில் இந்தாண்டுற்கான கல்லூரியின் சிறந்த மாணவர் விருதினை உணவு தொழில்நுட்ப துறை மாணவி சாந்தினிக்கு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.