2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்களிடமிருந்து வேட்புமனுக்கள் வரவேற்கப்பட்ட நிலையில் அதை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நேற்றோடு (6.4.26) முடிவடைந்தது.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்புமனுக்கள் மற்றும் செல்லத்தக்கதாகக் கருதப்பட்ட வேட்புமனுக்கள் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 450 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 450 வேட்புமனுக்களில், 249 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன, 201 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தொண்டாமுத்தூரில் 77 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும், இறுதியில் 22 மனுக்கள் மட்டுமே செல்லத்தக்கவை என கண்டறியப்பட்டன.
கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் 61 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 38 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கோவை வடக்கில் 49 மனுக்களில் 29 மனுக்களும், சிங்காநல்லூரில் 44 மனுக்களில் 29 மனுக்களும் செல்லத்தக்கவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
மேட்டுப்பாளையம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 48 மனுக்களில் சரியாக பாதி, அதாவது 24 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
சூலூரில் தாக்கல் செய்யப்பட்ட 32 மனுக்களில் 17 மனுக்களும், கவுண்டம்பாளையத்தில் தாக்கல் செய்யப்பட்ட 33 மனுக்களில் 17 மனுக்களும் செல்லத்தக்கவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியில் தாக்கல் செய்யப்பட்ட 34 மனுக்களில் 14 மனுக்கள் மட்டுமே செல்லத்தக்கவை எனத் தெரிந்தது.
கிணத்துக்கடவில் தாக்கல் செய்யப்பட்ட 43 மனுக்களில் 5 மனுக்கள் மட்டுமே செல்லத்தக்கவை என்றும், வால்பாறையில் தாக்கல் செய்யப்பட்ட 29 மனுக்களில் 6 மனுக்கள் மட்டுமே செல்லத்தக்கவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

