மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரால் உலக அளவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவை இது பெரிதும் பாதித்துள்ளது.

இந்த நிலையில் இன்று இந்தியாவின் சிவாலிக் எனும் கப்பல் சுமார் 45,000 டன் மெட்ரிக் எல்.பி.ஜி. வாயுவுடன் மாலை 5 மணிக்கு இந்தியாவுக்குள் நுழைகிறது.

நாளை 80,800 – 81,000 மெட்ரிக் டன் அளவிலான கச்சா எண்ணெய்யுடன் ஜக் லாட்கி எனும் கப்பலும், 46000 முதல் 47000 மெட்ரிக் டன் எல்.பி.ஜி. வாயுவுடன் நந்தா தேவி எனும் கப்பலும் இந்தியாவுக்குள் வருகின்றன.

சிவாலிக் கப்பல் இன்று குஜராத்தில் உள்ள முந்திரா துறைமுகத்தில் வந்து சேரும். நாளை குஜராத்தில் உள்ள கண்ட்ல துறைமுகம் மற்றும் முந்திரா துறைமுகத்தில் நந்தா தேவி மற்றும் ஜக் லாட்கி கப்பல்கள் வந்து சேரும்.

இந்த கப்பல்களில் வரவால் சமையல் எரிவாயு பிரச்சனை சற்று தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஜக் லாட்கி கப்பல் பாதுகாப்பாக ஞாயிறு அன்று புறப்பட்டது. அங்கு புஜைரா தளத்தில் கச்சா என்னை ஏற்றிக்கொண்டிருந்த போது தாக்குதலுக்கு அந்த இடம் உள்ளானது. இருந்தபோதும் இந்தியக்கப்பல் அங்கிருந்து ஞாயிறு காலை 10.30 மணி அளவில் பாதுகாப்பாக கிளம்பியது.

அதேபோல் 14ம் தேதி அன்று ஹோர்மோஸ் ஜலசந்தி பகுதியை ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி கப்பல்கள் பாதுகாப்பாக கடந்தது குறிப்பிடத்தக்கது.