தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சிம்பியா ப்ரோ.ஸ்பெக்டா ஸ்பெக்ட்/சிடி என்ற அதிநவீன இமேஜிங் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்கும் இந்தியாவின் நான்காவது மருத்துவமனை கே.எம்.சி.ஹெச் ஆகும்.

ஸ்பெக்ட் மற்றும் 32 ஸ்லைஸ் சிடி ஆகிய இரு தொழில்நுட்பங்களும் ஒருங்கிணைந்த இக்கருவி, உடல் உறுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் ஏதேனும் அசாதாரண மாறுபாடு உள்ளதா என்பதையும் மிகவும் விரிவாக தெரியப்படுத்தும் திறன் கொண்டது.

கே.எம்.சி.ஹெச் கோவையிலேயே முதன்முறையாக 2011-ம் ஆண்டு இந்த தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. கடந்த 15 வருடங்களாக ஏராளமான நோய்கள் கண்டறிய இது துணைபுரிந்து வருகிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இப்புதிய கருவி நோயாளிகளுக்கு மேலும் துல்லியமான பரிசோதனை முடிவுகளை வழங்கும்.

சிம்பியா ப்ரோ.ஸ்பெக்டா ஸ்பெக்ட்/சிடி கருவி   துல்லியமான நோயறிதலுக்கு உதவிடும் உயர்தர இமேஜிங், நோயாளியின் பாதுகாப்பிற்காக குறைந்த கதிர்வீச்சு அளவு, தெரனோஸ்டிக்ஸ் தயார்நிலையுடன், மேம்பட்ட சிகிச்சை அணுகுமுறைகளுக்கு துணை புரிகிறது.

புற்றுநோய், இருதய நோய், மூளையின் ரத்த ஓட்ட மாற்றம், ஜீரண மண்டலத்தில் ஏற்படும் ரத்த கசிவு, பார்கின்சன்ஸ் நோய், இதய  ரத்த ஓட்ட செயல்பாடு, தைராய்டு, பாரா தைராய்டு கட்டிகள், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகள்,  தைராய்டு புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மற்றும் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய் முதலான பல்வேறு பிரச்சனைகளுக்கு கே.எம்.சி.ஹெச் அணுவியல் மருத்துவ துறையில் பரிசோதனைகள் செய்யப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

செயல் இயக்குனர் டாக்டர். அருண் பழனிசாமி கூறியதாவது: சிம்பியா ப்ரோ.ஸ்பெக்டா ஒரு மேம்பட்ட கருவி மட்டுமல்ல; இது செயல்பாட்டுத் திறனையும் நோயறிதல் துல்லியத்தையும் மேம்படுத்தும் ஒரு ஆற்றல் மிக்க உபகரணமாகும். நோயாளிகளின் நலனை முன்னிறுத்திய புதுமை மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்தார்.

மிகவும் துல்லியமான சிகிச்சை

கே.எம்.சி.ஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறுகையில்: தமிழ்நாட்டில் சிம்பியா ப்ரோ.ஸ்பெக்டா ஸ்பெக்ட்/சிடி.,யை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். இந்த புதிய கருவி, நோயாளிகளுக்கு சிறந்த நோயறிதல் திறன்களை வழங்குவதற்கும், மிகவும் துல்லியமான மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சைகளை உறுதி செய்வதற்கும் நாங்கள் கொண்டுள்ள உறுதிப்பாட்டிற்கு ஒரு நற்சான்றாகும்.

இந்த நவீன மருத்துவக் கருவியைத் தருவித்து நிர்மாணம் செய்திடத் தேவையான முன்முயற்சிகள் எடுத்த அணுவியல் மருத்துவத் துறை மருத்துவர்கள் கமலேஸ்வரன், ராம்குமார் மற்றும் மருத்துவக் குழுவினருக்கு  பாராட்டுதல்களையும் நலவாழ்த்துகளையும் தெரிவித்தார்.