கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், அலர்ட் சமூக தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மாணவர்களுக்காக அலர்ட் வாய்ஸ் என்ற அவசரகால மீட்பு பணி பயிற்சித் திட்டத்தை ஏற்பாடு செய்தது.

இந்த பயிற்சியில் இளம் தன்னார்வலர்களுக்கு அவசரகாலங்களின் போது திறம்பட செயல்பட சி.பி.ஆர் முதலுதவி போன்ற அத்தியாவசிய உயிர்காக்கும் திறன்கள் கற்றுக் கொடுக்கப்பட்டது. சமூக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது.