கோவை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பருத்தியில் உழவர் பெருவிழாவானது இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஹைதராபாத் மண்டலம் அட்டாரி இயக்குனர் ஷேக் மீரா  கலந்துகொண்டு, தொழில் முனைவோர்களின் கண்காட்சியை திறந்து வைத்தார்.

சிறப்பு விருந்தினர் ஷேக் மீரா பேசுகையில்: பருத்தியில் அடர் நடவு முறையில் 14 குவின்டால் வரை மகசூல் பெற்று அதிக லாபம் ஈட்ட முடியும். கிணத்துக்கடவு மற்றும் மதுக்கரை ஆகிய வட்டாரங்களில் நீண்ட இழை பருத்தி சாகுபடி பரவலாக இருப்பதால் விவசாய பெருமக்கள் அனைவரும் பருத்தி சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.  தொண்டாமுத்தூர் நகராட்சியில் காய்கறி சாகுபடி அதிக அளவில் பயிரிட வேண்டும் என்றார்.

அதிக விளைச்சல் எடுத்த பருத்தி விவசாயிகளுக்கும் மற்றும் நிலையத்தின் முன்னோடி விவசாயிகளுக்கும் சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டன. எஸ்.சி.எஸ்.பி திட்டத்தில் இடுப்பொருட்களும் வழங்கப்பட்டன.

icar 2

நிகழ்வில் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், தலைவர் (பொறுப்பு) கோமதி, அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பாரதி ஹரி ஷங்கர், கோவை மாவட்டத்தின் வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் செல்வி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.