டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்பில் “சமையல் சீருடை வழங்கும் விழா” திங்கட்கிழமை(18.08.2025) நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு சீருடையை வழங்கினார். மேலும் இந்நிகழ்வில் கல்லூரியின் செயலாளர் தவமணிதேவி பழனிசாமி, இயக்குநர் முத்துசுவாமி, டீன் மீரா ராமன், முதல்வர் சரவணன், துறைத் தலைவர் பிரசாந்த் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
