ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியின் 20ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (4.1.2025) நவ இந்தியாவில் உள்ள எஸ்.என்.ஆர். கலையரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மதுரை எம்எஸ்ஆர் டூத் கிளினிக்கின் கன்சர்வேடிவ் மற்றும் எண்டோடோன்டிஸ்ட் பிரகாஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், கல்லூரி முதல்வர் தீபானந்தன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.