ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் தலைமை தாங்கி பேசும்போது, நம் நாட்டைக் கட்டமைப்பதில் மாணவர்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. அவர்களின் சிந்தனையாற்றலும் செயல் திறமும் மேம்பட இதுபோன்ற நிகழ்ச்சிகள் பயிற்சிகளாக அமையும் என்று கூறினார்.
கல்லூரி முதல்வர் சித்ரா கூறும்போது, எங்கள் கல்லூரியின் சார்பில் நடத்தப்பட்ட விளம்பரங்களை வடிவமைத்தல், வினாடிவினா, வீடியோ உருவாக்குதல், போஸ்டர் வடிவமைப்பு, பயோ கனெக்ஷன், பேச்சுப்போட்டிகள், ஐடியாதான் போன்ற போட்டிகளில் கோவையைச் சேர்ந்த பள்ளிகளிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

எல்லா மாணவர்களிடமும் திறமைகள் இருக்கின்றன. அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக் கிடைக்கும்போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றார்.

