கோவை ரூட்ஸ் குழும நிறுவனங்கள், பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் மேலாண்மை துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கல்லூரியின் செயலர் யசோதா தேவியிடம், ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வளம் மேம்பாட்டு துறை இயக்குனர் கவிதாசன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் ஹாரத்தி, கல்லூரி வளாக இயக்குனர் கலைச்செல்வன்  ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் சந்திரசேகர் மற்றும் பயிற்சி துறை தலைவர் சம்பத்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.