குளுகுளு கோவை சீசன் முடிவடைந்த கொளுத்தும் கோடை சீசன்மாநகரில் துவங்கிவிட்டது. “அந்த இளநீர் கடை எங்கனு பாருங்க” என மக்கள் பலரும் சொல்வதை கேட்க முடிகிறது.

வரக்கூடிய சில நாட்கள் கோவை மாநகரில் எப்படிப்பட்ட வானிலை இருக்கும் என கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்-யிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

நேற்று (23.2.26) கோவையில் வெயில் இந்த ஆண்டில் முதல்முறையாக 35° செல்சியஸ் தொட்டது. கோவை அருகே உள்ள ஈரோடு, கரூர், சேலத்தில் சற்று கூடுதலாகவே வெப்பம் பதிவாகி இருக்கிறது.கோவை மாநகரை பொறுத்தவரை இந்தா வாரத்தில் வெப்பம் 33°-35° வரை இருக்க வாய்ப்புள்ளது. மாநகரின் ஒரு சில இடங்களில் இந்த வாரம் வெள்ளி – சனி வரை லேசானது முதல் மிதமான  வெப்ப சலன மழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.