கோவை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன்  ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி யாக பணியாற்ற பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் ஐ.ஜி யாக பதவி உயர்வு பெற்று கோவை மாநகர காவல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் கோவை மாநகர காவல் ஆணையாளராக பதவியேற்றுக் கொண்டார்.

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த சரவணா சுந்தர்,

கோவை மாநகர காவல் ஆணையாளராக,  எனக்கு இந்த பணியை வழங்கிய தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்,  இந்த புதிய பணியில் என்னால் எவ்வாறு சிறப்பாக செயல்பட முடியும் என்பதை குற்ற நடவடிக்கைகள் மூலமாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது மூலமும், விபத்து வழக்குகள் மரணங்களைத் தவிர்ப்பதன் மூலமாகவும், அனைத்து காவல் ஆளுநர்கள், ஆய்வாளர்கள், அவர்களுடைய பணியை மேம்படுத்தி 24 மணி நேரமும் கோவை நகரை இடை விடாது கண்காணிக்க பீட் ஆபிஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தி சட்டம் ஒழுங்கு, ரவுடிகளுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டு, கஞ்சா போதை உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவ்வாறு செயல்படும் குற்றவாளிகளைக் கைது செய்தும் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும் பழைய ஆணையாளர்  துவங்கி வைத்த அனைத்து திட்டங்களும் திறமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறினார்.