கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜி துறையின் சார்பில் சீரற்ற இதயத் துடிப்புகள் பற்றிய கோவை ஹார்ட் ரிதம் கருத்தரங்கு நடைபெற்றது.
இதயத் துடிப்பு நிர்வாகத்தில் புதிய முன்னேற்றங்கள் குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியா முழுவதிலும் இருந்து 20-க்கும் மேற்பட்ட நிபுணர்களும், 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.
கிரையோஅப்லேஷனை தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு நோய்க்கென்ற பிரத்யேக சிகிச்சை மையத்தையும் துவக்கிய பெருமை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையைச் சாரும் என்று கருத்தரங்கு ஏற்பாட்டு செயலாளர் டாக்டர் லாரன்ஸ் ஜேசுராஜ் தெரிவித்தார்.
கருத்தரங்கைத் துவக்கிவைத்து உரையாற்றிய கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, இதயத் துடிப்பு கோளாறுகளுக்கான பிரத்யேக மையத்தினால் சிறப்பான சிகிச்சைகளை உரிய நேரத்தில் குறைவான செலவில் அளிக்கமுடியும் என்றும், கார்டியாக் பேசிங் மற்றும் எலக்ரோபிசியாலஜி துறை இதில் முன்னோடியாகத் திகழ்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இதய மின் உடலியல் என்பது இதயத்தின் மின் அமைப்பில் ஏற்படும் கோளாறுகளைக் கையாளும் மருத்துவப் பிரிவாகும். பொதுவாக இதயத் துடிப்புக் கோளாறுகள் என்று அழைக்கப்படும் இந்த நோய்கள், இதயத்தைப் பாதிக்கும் தீவிர நோய்களில் ஒன்றாகும். இதனால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனைச் சரிசெய்ய அதிநவீன க்ரையோ அப்ளேஷன் சிஸ்டம் மற்றும் என்சைட் எக்ஸ் சிஸ்டம் கே.எம்.சி.ஹெச்-ல் உள்ளது. க்ரையோ அப்ளேஷன் சிகிச்சையைத் தொடங்கிய முதல் தமிழக மருத்துவமனை கே.எம்.சி.ஹெச் என்பதும், இந்தியாவிலேயே அதிகளவில் இதயத்துடிப்பு பிரச்சினைகளுக்கான சிகிச்சை அளிக்கும் மையங்களில் ஒன்றாகவும் விளங்குவதும் குறிப்பிடத்தக்கது.
