இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில் உலகளாவிய திறன் மையங்கள் (GCC) கோயம்புத்தூர் மாநாடு-2025 துவக்க விழா இன்று நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். எல்ஜி எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயராம் வரதராஜ் மாநாட்டில் தலைமையுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஜிசிசி அறிக்கை வெளியிடப்பட்டது.

நிகழ்வில் சி.ஐ.ஐ கோயம்புத்தூர் மண்டலத் தலைவர் ராஜேஷ் துரைசுவாமி, மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் ராமசாமி, சந்திரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நந்தினி ரங்கசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.