வரும் டிசம்பர் மாதம் முதல், கோவையில் துாய்மை பணியாளர்களுக்கு ஒரு வேளை இலவச உணவு வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இட்லி, சாம்பார், கிச்சடி, பொங்கல் என தினமும் ஏதேனும் ஒரு உணவு சுழற்சி முறையில் வழங்கப்பட உள்ளது.

காலை உணவு வழங்கும் திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் வினியோகிக்கும் வகையில் ஓரிடத்தில் கிச்சன் ஏற்படுத்தி, அங்கிருந்து மண்டலம் வாரியாக, தொழிலாளர்களின் எண்ணிக்கையை பொறுத்து, வேன்கள் மூலம் வார்டு அலுவலகங்களுக்கு கொடுத்தனுப்பலாம் என ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், லாரி டிரைவர்களுக்கு காலை உணவு, இரவு ஷிப்ட்  தொழிலாளர்களுக்கு இரவு டிபன் வழங்கப்பட உள்ளது. மொத்தம் 8,200 தொழிலாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவர்.