கோவை மண்டல அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான முதலமைச்சர் கோப்பை பளு தூக்கும் போட்டி கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்வில் கே.பி.ஆர் குழும தலைவர் கே.பி. ராமசாமி, கல்லூரியின் முதல்வர் கீதா கலந்துகொண்டனர்.

புத்துணர்ச்சி மற்றும் விளையாட்டு மேலாண்மைத் துறையைச் சேர்ந்த அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் தமிழ்நாடு பளு தூக்கும் கூட்டமைப்பின் தலைமைச் செயலாளர் வடிவேலு ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.

kpr

போட்டிகளில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.