கோவையில் மறைந்த முன்னாள் எம்.பி மோகன் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெல்லும் என்பது ஈரோடு கள ஆய்விற்குப் பிறகு நன்றாகத் தெரிகின்றது. ஒரேடு நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயக படுகொலை. அம்பேத்கர் விவகாரம், அடுத்த கட்டம் தொடர்பான கேள்விக்கு, இந்தியா கூட்டணி தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும். மேலும், ஈரோடு இடைத்தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்கொள்ளும். ராகுல்காந்தி மீது போடப்பட்ட வழக்கை அவர் சட்டப்படி சந்திப்பார் என்றவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கு நல்லா பார்க்கின்றார்கள் என சிரித்தபடி பதிலளித்தார்.