புதிய கட்டுமான நிறுவனமான சின்கோ நிறுவனத்தின் அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள மெர்லிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் சின்கோ கிரெசென்டோ, சின்கோ ஆரன்யா ஆகிய இரண்டு புதிய அதிநவீன அடுக்குமாடி குடியிருப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.
துடியலூரில் அன்னபூர்ணா ஹோட்டல் பின்புறம் 2, 3, 4 படுக்கையறைகள் கொண்ட ஃபிளாட்டுகளுடன் சின்கோ கிரெசென்டோ அபார்ட்மென்ட் அமைந்துள்ளது. சரவணம்பட்டியில் 2, 3 படுக்கையறைகள் கொண்ட ஃபிளாட்டுகளுடன் சின்கோ ஆரன்யா அபார்ட்மெண்ட் அமைந்துள்ளது. மாடல் அபார்ட்மெண்ட்டுகள் பொதுமக்கள் பார்வையிட தயார் நிலையில் உள்ளன. ரூ.60 லட்சம் முதல் ஃபிளாட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
நிகழ்வில் கிரீன்ஃபீல்ட் ஹவுசிங் தலைவர் சதாசிவம், சின்கோ இந்தியா தலைவர் ஆனந்தவடிவேல், சி.எம்.கே புராஜெக்ட்ஸ் தலைவர் வெங்கடாசலம், கிரீன்ஃபீல்ட் ஹவுசிங் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம், விஎஸ் & கோ நிர்வாக இயக்குனர் அரவிந்த், சின்கோ இந்தியா இயக்குனர்கள் ப்ரீதிவ் வெங்கட், பிரணவ் ஹர்ஷன், சானு ராகவ், தனு ஆதவ், விஷால் ஆகியோர் கலந்துகொண்டனர்
