Fகிறிஸ்ட் தி கிங் பாலிடெக்னிக் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.  கல்லூரி முதல்வர் அந்தோணி பெர்னாண்டஸ் வரவேற்றார்.

முதன்மை விருந்தினராக கல்லூரி தலைவர் கோவை மறை மாவட்ட மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ்   கலந்து கொண்டார். மாணவர்கள் கல்வியுடன் சேர்த்து நல்ல ஒழுக்கம், சமூக பொறுப்பு மற்றும் மனித நேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு முக்கியமானது என்றும் வலியுறுத்தினர்.

கல்லூரி தாளாளர் தந்தை பேரருட் ஜான் ஜோசப் ஸ்தனிஸ், கிறிஸ்துமஸ் காலம் என்பது பிறருக்கு உதவும் மனப்பாங்கையும், தேவையுள்ளவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் உணர்வையும் வளர்க்கும் காலம் என்று கூறினார். விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.