சுதந்திர தின தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க, சென்னை – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06027) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூரை சென்றடையும். இந்த ரயில்  பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியே போத்தனூரை அடையும்.

அதேபோல மறுமார்க்கத்தில் போத்தனூரில் இருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06028) புறப்பட்டு, மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.