கோவை, வடகோவை ரயில் நிலையத்தில் தண்டவாள புதுப்பித்தல் பணிகள் நடைபெறுவதால் செப்டம்பர் 14 சில ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, போத்தனூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு (எண் 66612) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மதியம் 1.05 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு (எண் 66615) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ஆலப்புழாவிலிருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் (எண் 13352) கோவை ரயில் நிலையத்தைத் தவிர்த்து, போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூரில் மதியம் 12.17/12.20 மணிக்கு நின்று செல்லும்.

காலை 9.10 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பிலிருந்து புறப்படும் எர்ணாகுளம் – கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (எண் 12678) கோவை ரயில் நிலையத்தைத் தவிர்த்து, போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூரில் மதியம் 12.47/12.50 மணிக்கு நின்று செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி – பிலாஸ்பூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 22620) கோவையைத் தவிர்த்து போத்தனூர் – இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் போத்தனூரில் மதியம் 1.10 / 1.15 மணிக்கு நின்று செல்லும்.